ராஜேந்திரபாலாஜி – ராஜவர்மன்  இணைந்தனர்!... விருதுநகர் மாவட்ட அதிமுக உற்சாகம்!

Rajendrapalaji - Rajavarman joined! - Virudhunagar district ADMK enthusiasm!

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் நட்பை முறித்துக்கொண்டு, எதிர் அரசியல் செய்துவந்த முன்னாள் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், கடந்த சட்டமன்றத் தேர்தலில்அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை எதிர்த்துஅமமுக வேட்பாளராகப் போட்டியிட்டார். இருவருமே தோல்வியுற்ற நிலையில், மதிமுக வேட்பாளர் ரகுராமன் அத்தொகுதியில் வெற்றிபெற்றார்.

தற்போது, விருதுநகர் மாவட்ட அதிமுகவைப் பலப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு கே.டி. ராஜேந்திரபாலாஜி எடுத்துவரும் முயற்சியால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைசந்தித்து, மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார் ராஜவர்மன்.

பல ஆண்டு காலம் கைகோர்த்து அரசியல் செய்துவந்த ராஜேந்திரபாலாஜியும் ராஜவர்மனும்பிரிவுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது, விருதுநகர் மாவட்ட அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

admk rajavarman rajendra balaji
இதையும் படியுங்கள்
Subscribe