Skip to main content

பிடிஆரின் செயல்பாடுகளை பாராட்டிய ராஜேந்திர பாலாஜி..! 

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

Rajendra Balaji praises Finance Minister's performance ..!

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த பல அமைச்சர்கள் இருக்கும் இடம் தெரியாமல் தற்போது தங்களுடைய அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது முன்னாள் அமைச்சர்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். இதனிடையே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று இரவு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார்.

 

கடந்த ஆட்சி காலத்தில் ஓரிரு கூட்டங்களுக்கு மட்டும் திருச்சிக்கு வருகை தந்த ராஜேந்திர பாலாஜி, நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்ததால் அதிமுகவினர் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். தரிசனத்தை முடித்துக்கொண்டு தஞ்சைக்கு புறப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய அரசியல் சூழல் நன்றாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. திமுகவின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒரு நல்ல நாகரீகத்தை கொண்டுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார். தற்போதைய திமுக நிதி அமைச்சரின் செயல்பாடும் நன்றாக உள்ளது” என பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபிரபாகரனுக்கு சாலியர் மகாஜன சங்கம் ஆதரவு! - ராஜேந்திரபாலாஜி வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Saliyar Mahajana Sangam support for Vijaya Prabhakaran

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியிலான வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சியினரும், போட்டியிடும்  வேட்பாளர்களும் முனைப்பு காட்டிவருகின்றனர். அதற்காக, சமுதாயப்  பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, அருப்புக்கோட்டையிலும் சாத்தூரிலும் சாலியர்கள் அதிகமாக  வசிக்கின்றனர். இந்நிலையில், சாலியர் மகாஜன சங்கமும், நெசவாளர் முன்னேற்றக் கழகமும், இத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  

சாலியர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவரான ஏ.கணேசன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் உடனிருந்தார்.  தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தினார்கள்.  

Next Story

“பா.ஜ.க. வாஷிங் மிஷின் போல் செயல்படுகிறது” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
BJp Works like a washing machine  Minister Palanivel Thiagarajan
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், “கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு பா.ஜ.க.வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி பேசுகையில், “அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலத்தின் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவுகான் என 25 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்தன.

அதன் பின்னர் இவர்கள் தங்களது கட்சிகளை விட்டு பா.ஜ.க.வின் இணைந்து விட்டனர்.  இவர்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து குற்ற்ச்சாட்டுகளும் ஆவியாகிப் போய்விட்டன. ஏனென்றால் பாஜகவின் வாஷிங் மெஷினில் சேர்ந்து வெள்ளையோடு வெள்ளையாகி விட்டன” எனத் தெரிவித்தார். முன்னதாக நேற்று (02.04.2024) பரப்புரை மேற்கொண்ட போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.