அமமுகவில் இருந்து டி.டி.வி.தினகரனே விலகி சென்றுவிடுவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அமமுகவில் இருந்து விரைவில் புகழேந்தி மட்டுமல்ல, டிடிவி தினகரனே விலகி சென்றுவிடுவார். டிடிவி தினகரனின் நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தினகரனுடன் இருப்பவர்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கட்சியில் யாரும் இல்லை. அனைவரும் அதிமுகவில் சேர்ந்துவிட்டனர். டிடிவி தினகரனுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமிதான் மாஸான மற்றும் பாஸான லீடர் என்றார்.