Advertisment

டெபாசிட் இழந்த கட்சி தேமுதிக... ராஜேந்திர பாலாஜி கிண்டல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஆவின் பால் விற்பனை நிலையத்தை நேற்று திறந்து வைத்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

Advertisment

அப்போது, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா 2011ல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக ஆட்சி அமைத்தது. இன்றும் ஆட்சியில் இருக்கிறது என்றார்.

Advertisment

இதுதொடர்பாக ராஜேந்திர பாலாயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிதற்கு, ''அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததால்தான், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல், மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததால்தான் தேமுதிக டெபாசிட் இழந்தது.

rajendra balaji

அதிமுக என்ற குதிரையில் யார் வேண்டுமானாலும் சவாரி செய்யலாம். அந்த குதிரையை நான்தான் தூக்கிக்கிட்டு செல்வேன் என்று சொல்லக்கூடாது. அதிமுக அமைத்துள்ள கூட்டணி தெய்வீக கூட்டணி. இந்திய இறையாண்மையை ஒற்றுமையை பாதுகாக்கக் கூடிய கூட்டணி. கூட்டணியை பலப்படுத்தவும், வெற்றி மேல் வெற்றி பெறவும் தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமாகாவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதா இருந்திருந்தால் கூட பாஜவுடன்தான் கூட்டணி அமைத்திருப்பார். இவ்வாறு கூறினார்.

admk Alliance dmdk rajendra balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe