ddd

Advertisment

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த பிரமுகருக்குநடந்துள்ளசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாலிங்கம். இவர் வழக்கம்போல அதிகாலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்தது. அவர்களை கண்டதும் ராஜாலிங்கம் தப்பியோடி முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது.

Advertisment

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜபாளையம்-திருநெல்வேலி சாலையில் உள்ள முதுகுடி விலக்கில் அவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.