Advertisment

ராஜன் செல்லப்பாவை இப்படிப் பேசு என்று... பழனியப்பன்

அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.

Advertisment

Rajan Chellappa

இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், சந்தர்ப்பவாதத்துக்காக இருவரும் ஒன்று சேர்ந்தார்கள். இப்போது அது வெளியே தெரிந்துவிட்டது. எவ்வளவு நாள்தான் வெளியே தெரியாமல் மறைத்து வைக்க முடியும். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஓ.பன்னீர் செல்வம், ராஜன் செல்லப்பாவை வைத்து இப்படிப் பேசு என்று சொல்கிறார்.

Advertisment

ஓ.பி.எஸ். தனியாக டெல்லி செல்கிறார், ஈ.பி.எஸ். தனியாக டெல்லி செல்கிறார். இருவரும் தனித்தனியே சென்று அமர்ந்தனர். இருவரும் சேர்ந்து அறிக்கைகள் எதையும் வெளியிடுவது இல்லை. ஈ.பி.எஸ். போகும் நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். கலந்து கொள்வதில்லை. ஓ.பி.எஸ். செல்லும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுவதில்லை. இதுதான் அதிமுகவில் நடக்கிறது. இது அவர்கள் நடத்தும் தலைமைக்கு, இயக்கத்திற்கு அழிவாக அமைந்துவிட்டது என்றார்.

admk MLA Rajan Chellappa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe