Advertisment

ராஜகண்ணப்பன் திமுகவில் இணையும் விழா ஏற்பாடுகள்!

அதிமுக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் திமுகவில் இணைய முடிவு செய்துள்ளார். தனது ஆதரவாளர்கள் 2 லட்சம் பேருடன் பிப்ரவரி 23 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் அவர் இணைகிறார்.

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் இதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் விழா நடைபெறும் இடத்தில் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் இரு மாவட்டத் திமுகவினர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. கூட்ட ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Advertisment

விழா ஏற்பாடுகளை இரண்டு மாவட்டச் செயலாளர்களுடன் மதுரை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் பரந்தாமன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேகர், வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் ஜி.பி.ராஜா, மாணவரணிச் செயலாளர் மருதுபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி, சிறைச்செல்வன், அ.ப.ரகுபதி உள்ளிட்ட இரண்டு மாவட்ட கழகங்களின் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

join madurai rajakannappan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe