Rahul who appeared in person; Surat Court is the main order

மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகள்சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Advertisment

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்கத் தயார்' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தின் பையோ எனப்படும் சுயவிவரக் குறிப்பில் 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி' எனத்திருத்தியுள்ளார்.

Advertisment

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் உடனடியாக ரத்தாகும். நீதிமன்றத்தின் உத்தரவினைத் தொடர்ந்து நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2 ஆண்டுகள்சிறைதண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். ராகுல் தாக்கல் செய்த மனுவில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. சூரத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நேரில் ஆஜரான அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் வந்திருந்தனர். ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

Advertisment

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டிற்கு வரும் 10 ஆம் தேதி ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்த புர்னேஷ் மோடி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், ராகுல் காந்திக்கு ஒரு மாத காலம் தண்டனையை நிலுவையில் வைத்திருந்த நிலையில் தற்போது சூரத் மாவட்ட நீதிமன்றம், ‘சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடிவடையும் வரை பிணை அமலில் இருக்கும் என்றும்இடைப்பட்ட காலத்தில்ராகுல் சிறை செல்லத்தேவையில்லை எனத்தெரிவித்துள்ளது. ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனையும் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் வரை நிலுவையில் இருக்கும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஏப்ரல் 13 அன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில்அன்று ராகுல் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.