வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இந்திய ஒற்றுமை நீதி பயணம் எல்.இ.டி. திரையில் நேரடி ஒளிபரப்பு வாகனத்தை மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில்எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த், வடசென்னை கிழக்கு மாவட்டத்தலைவர் எம்.எஸ். திரவியம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத்தலைவர்கள், கட்சியின் பல்வேறு துறையைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.