சி.பி,எஸ்.சி பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதில் 10ஆம் வகுப்பின் கணக்குத் தேர்வுக்கான வினாத்தாளும்,12 ஆம் வகுப்பிற்கான பொருளியல் வினாத்தாளும்தேர்வுக்கு முன்பே வெளியான செய்தி தேர்வு முடிந்தபின் வெளிவர, தற்போது அந்த இரு தேர்வுகளுக்கான மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு நடக்குமென்றும்பத்தாம் வகுப்பு தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாமலும் இருக்கிறது. இது போன்று வினாத்தாள் வெளியானதற்கு பல எதிர்ப்புகளும், கண்டனங்களும் மத்திய அரசு மீது எழுந்துள்ளது.

Advertisment

rahul tweet

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து மோடியை கிண்டல் செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற புத்தகத்தை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

Advertisment

அந்தப்பதிவில் ராகுல் கூறியிருப்பது:

"பிரதமர், அடுத்துஎக்ஸாம்வாரியர்ஸ்-2 என்ற புத்தகத்தை எழுதுவார். அந்த புத்தகம்இதுபோன்று வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகி மறுதேர்வு வைக்கும் பொழுதுமாணவர்கள்,பெற்றோர் மன அழுத்தம் அடையாமல் இருக்க உதவும்"