/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahul in.jpg)
மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்த மாநில மக்களுக்காக ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் " வாக்கு என்பது ஜனநாயக உரிமை மட்டும் அல்ல, அது உங்களின் ஆயுதம்,அதனை இன்று சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் வாக்குப்பதிவிற்கு செல்லும் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார். இன்று தேர்தல் நடைபெறும் 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)