Advertisment

ராகுலுக்கு சிறைத் தண்டனை; திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

rahul gandhi surat court judgement related issue involved trichy congress 

பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

Advertisment

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "பாசிச மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நோக்கத்தில் சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சிவகாமசுந்தரி, சிறுகமணி பேரூராட்சி தலைவர் கே.ஆர்.ஆர்ராமலிங்கம் எனப் பலர் கலந்து கொண்டனர்.

trichy congress
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe