Skip to main content

"நாங்கள் உழைக்கிறோம்; நல்ல காலம் பிறக்கும்!" - விவசாயிகள் கூட்டத்தில் 'மாஸ்' காட்டிய ராகுல்!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

Rahul Gandhi speech at karur


ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் 3 நாள் சுற்றுப் பயணமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் ராகுல் காந்தி. 


கடந்த சனிக்கிழமை கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஞாயிற்றுக் கிழமை ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், திங்கட்கிழமையான இன்று (25.01.2020) காலை சரியாக 11.30 மணிக்கு கரூர் நுழைந்தவர், சின்னதாராபுரம் பகுதியில் அளிக்கபட்ட பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு கரூர் நகரப் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 

அதன்பின், விவசாயிகளோடு கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றிய ராகுல் காந்தி, "மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு கொடுமை இழைத்துவருகிறது. விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது” எனக் குற்றம் சாட்டினார். 

 

விவசாயிகள் பலர், தொடர்ந்து விவசாயத் தொழிலில் தாங்கள் சந்தித்து வரக்கூடிய மோசமான நிலையை ராகுல் காந்தியிடம் எடுத்துக் கூறினார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், “மோடியின் ஆட்சிக் காலத்தில் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் மிகக் கொடூரமாக மாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய பா.ஜ.க., விவசாயத்தின் அடிப்படையையும் விவசாயத்தையும்  தகர்க்கக்கூடிய கொள்கை முடிவை எடுத்துக் கொண்டிருக்கிறது.

 

நான், இன்று உங்களைச் சந்திப்பதின் நோக்கம் விவசாயத்திலும் விவசாயிகளுக்கும் உள்ள பிரச்சனையை, நான் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் டெல்லியில் தற்போது நடந்து கொண்டிருக்கக் கூடிய விவசாயிகளின் போராட்டமும், அதில் உள்ள கஷ்டத்தையும் உங்களோடு நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்” என்றார்.  

 

பெண் விவசாயி வெண்ணிலா, “எவ்வளவு உழைப்பைப் போட்டாலும் இறுதியில் எங்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது மிகவும் சொற்பமாகவே இருக்கிறது” என்றார். அதற்குப் பதில்கூறிய ராகுல்காந்தி, “விவசாயிகளுக்கு முழுமையான செய்திகள் வந்துசேர்வது இல்லை. ஏனென்றால் மத்தியில் இருக்கக்கூடிய அரசு, விவசாயிகளிடத்தில் உரிய செய்திகளைக் கொண்டுவந்து சேர்க்கத் தயாராக இல்லை. அதை மறைக்க முயல்கிறார்கள். விவசாயிகள் ஆகிய நீங்கள் தமிழிலேயே என்னோடு பேசலாம்; ஆங்கிலம் தேவை இல்லை” என்று கூறினார்.

 

வேளாண் குறித்துப் பேசிய விவசாயியைப் பாராட்டிய ராகுல், மத்திய வேளாண் மந்திரியை விட நீங்கள் சிறந்த மந்திரியாக இருப்பீர்கள் என்று பாராட்டினார். மேலும் அவர், “மத்திய அரசு இயற்றிய அந்த வேளாண் சட்டத்தில், மண்டியை ஒழிக்கவேண்டும் என்பதுதான் முதல் சட்டம். இரண்டாவது கண்டிப்பாக ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டு நீங்கள் என்ன விலைக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறீர்களோ அந்த ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் பணம் செலுத்தவில்லை என்றால் உங்களால் நீதிமன்றம் செல்ல முடியாது. மூன்றாவது சட்டம், பணம் இருப்பவர்கள் மொத்த பொருளையும் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்ளலாம். 

 

எந்த நிறுவனம் வேண்டுமானாலும் எந்த உற்பத்திப் பொருளுக்கு வேண்டுமானாலும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள முடியும். அந்த நிறுவனம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்கவேண்டும். இன்று, இந்தச் சட்டத்தால் பல கூலித் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல தொழில்கள்  நசுக்கப்படும்” என்றார். 

 

Rahul Gandhi speech at karur


பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி கேட்டுக்கொண்டிருந்தபோது. கூட்டத்தில் எழுந்து நின்ற விவசாயி ஒருவர், அவர் கையில் வைத்திருந்த பழைய ஐநூறு ரூபாய் நோட்டை ராகுல் காந்தியிடம் காட்டி, இந்த நோட்டு செல்லாது என்று சொல்லிவிட்டனர். தற்போது இந்த நோட்டை மாற்றுவதற்கு வங்கிக்கு எடுத்துச் சென்றால், ‘இது உதவாது பழைய நோட்டு குப்பையில்தான் போடவேண்டும்’ எனச் சொல்கிறார்கள் என்றார். அதற்கு ராகுல் காந்தி, “இந்தச் சகோதரர் வைத்திருக்கும் இந்த 500 ரூபாயை மத்திய அரசு திருடிக் கொண்டது” என்றார்.


வெள்ளைக்காரர்கள் 1885ல் கொண்டுவந்த சட்டத்தின் மூலம் நிலத்தைக் கையகப்படுத்துகிறார்கள். அதன் மூலம் கேஸ் குழாய்ப் பதிப்பது, எரிவாயு குழாய் பதிப்பது, உயர் மின்னழுத்தக் கோபுரங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் தொடர்ந்து இதே நிலை நீடிக்கிறது என்று விவசாயி குற்றம் சாட்டியுள்ளார்.
 

cnc

 

2013ல் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை இந்த மத்திய அரசு ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. கடந்த முறை காங்கிரஸ் ஒரு சிறந்த திட்டத்தை தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தது. 100 நாள் வேலைத்திட்டம் போலவே காங்கிரஸ் ஒரு புதிய திட்டத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்ற வகையில் கொண்டுவந்தது. அதுவும் வறுமையில் இருக்கக் கூடியவர்களில் கண்டறிந்து, நேரடியாக பணத்தை அவர்களுடைய வங்கிக் கணக்கில் போடுவதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமே, மாதம் ஆயிரம் ரூபாய் என்று வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்பு 100 நாள் வேலைவாய்ப்பை போலவே அவர்களுக்கும் அந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை மிகத் தெளிவாக நாங்கள் போட்டிருந்தோம் என்று ராகுல் கூறினார். 

 

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய தொடர்ந்து அரசு முயற்சித்து வருகிறது. அதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் தொடர வேண்டும். நீங்கள் தொடர்ந்து காங்கிரசோடு இணைந்திருங்கள். நல்ல காலம் பிறக்கும் நீங்களும் உழையுங்கள் நாங்களும் உழைக்கிறோம் என்று தன்னுடைய பேச்சை ராகுல்காந்தி முடித்துக் கொண்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.