Advertisment

ராகுல்காந்தியை கீழே தள்ளிவிட்டதைக் கண்டித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னையில் போராட்டம் (படங்கள்)

ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பூதாகரமாகி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் செல்வதாக அறிவித்தனர். அதன்படி அவர்கள் தங்களது வாகனத்தில் ஹத்ராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது போலீஸார் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

Advertisment

இதனையடுத்து, அவர்கள் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக நடந்தே செல்வதாக முடிவெடுத்து தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், நடந்து செல்லும் ராகுல் காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்த முற்பட்டதோடு, அவரை தள்ளிவிட்டதுஅப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ராகுல்காந்தியை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். அரசு உத்தரவை மீறியதற்காக ஐ.பி.சி.யின் 188 சட்டப்பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து ஹத்ராஸ் இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டும், ராகுல்காந்தியை கீழே தள்ளி விட்ட உத்திரபிரதேச காவல்துறையைக் கண்டித்தும் சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகே தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தியும் ஊருவ பொம்மையை ஏரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் அவர்களை போலிசார் கைது செய்தனர்.

K.S. ALAGIRI Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe