ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

Advertisment

Rahul

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அப்போது மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மகாத்மா காந்தி கொலைவழக்கில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டினார்.

Advertisment

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த ராஜேஸ் குண்டே என்பவர், ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனால் அரசியலமைப்புச் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை பிவாண்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மே 2ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஜூன் 12ஆம் தேதி ராகுல்காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, இன்று ராகுல்காந்தி பிவாண்டி நீதிமன்றத்திற்கு நேரில் சென்று ஆஜரானார். தன்மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறிய அவர், வழக்கை முறையாக எதிர்கொள்வேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.