காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் வழக்கமாக போட்டியிடும் உத்திரப்பிரதேச மாநிலம் அமேதியை தவிர்த்து, இரண்டாவது தொகுதியாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி அறிவித்துள்ளார்.

Advertisment

கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, மல்லங்கோடு என்ற இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

pon-radhakrishnan

அப்போது அவரிடம் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து கேட்டபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இந்தியாவில் போட்டியிடுவதற்கு சரியான தொகுதி இல்லாமல் போயிருக்கிறது. இப்போது அவர் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் அவர் தோல்வியை சந்தித்து பாராளுமன்றத்திற்கு நுழைய முடியாத ஒரு நிலையை அவர் அடைவதை வேதனையோடு இந்த நாட்டு மக்கள் பார்க்கப்போகிறார்கள் என்றார்.