தமிழ் மக்களின் உணர்வுகளை மோடியின் தோட்டாக்களால் நசுக்கமுடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

RaghulGandhi

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, அங்கு பொதுமக்கள் அறவழி போராட்டத்தை நடத்திவந்தனர். போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், அவர்களது பேரணிக்கு தடைவிதிக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வன்முறை தூண்டப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.