நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் முடிவுகளை கவனித்து வருகின்றனர். இந்தியாவே கவனிக்கும் முக்கிய வேட்பாளர்களாக நரேந்திர மோடியும் ராகுல் காந்தியும் இருக்கின்றனர்.
இதில், காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமராவர் என்று எதிர்பார்க்கப்படும் ராகுல் காந்தி, அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். ராகுல் இதற்கு முன்பு 2004, 2009, 2014 என மூன்று முறை உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் வென்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். இந்த முறை இரண்டு தொகுதிகளில் நின்றிருந்தாலும் தொடர்ந்து வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில்பின்னடைவை சந்தித்துள்ளார். இவரை எதிர்த்து நின்ற ஸ்மிரிதி இராணி முன்னிலையில் இருக்கிறார். இது இறுதி முடிவல்ல.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
ஆனால்,இப்படி தவறாக ஏதேனும் நடந்தால் நிலைமையை சமாளிக்கதான் வயநாட்டிலும் போட்டியிட்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கேரளாவை சேர்ந்த வயநாடு தொகுதியில் ராகுல் முன்னிலை வகிக்கிறார். வடக்கு கைவிட தெற்குதான் ராகுலுக்கு கைகொடுக்கும் என கணிக்கிறார்கள். ஆனால், முடிவுகள் இறுதியில்தான் தெரியும்.