காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நேற்று யோகா தினத்தை முன்னிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது தனது சமூக வலைதளத்தில் "இராணுவ வீரர்கள் நாய்களுடன் யோகா செய்யும் படத்தைப் பகிர்ந்து "புதிய இந்தியா" என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு மக்களவையில் குடியரசு தலைவர் உரையின் போது செல்போன் பயன்படுத்தியது விவாதத்தை கிளப்பியது.