நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸதையும் இழந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் கொடுத்து விட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

congress

புதிய தலைவரை உடனடியாக காங்கிரஸ் கரிய கமிட்டி தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் செயர்குழு உடனடியாக கூடி தலைவரை தேர்வு செய்யும் வேலையை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.