Advertisment

சேலம் மாநகர திமுக செயலாளராக ரகுபதி தேர்வு!

Raghupathi selected as Salem city DMK secretary!

சேலம் மாநகர திமுக செயலாளராக ரகுபதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தி.மு.கவில் 15வது அமைப்புத் தேர்தல் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அதன்படி, சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர திமுக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு ஆக. 9ம் தேதி வழங்கப்பட்டது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரி அழகிரி சதாசிவம், மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் வெற்றிச் சான்றிதழை, புதன்கிழமை (ஆக. 10) வழங்கினர்.

Advertisment

புதிய நிர்வாகிகள் விவரம்:

சேலம் மாநகர திமுக செயலாளர் ரகுபதி தேர்வு செய்யப்பட்டார். அவைத் தலைவராக முருகன், பொருளாளராக ஷெரீப், துணை செயலாளர்களாக பழக்கடை கணேசன், தினகரன், கோமதி ஆகியோர் செய்யப்பட்டனர். மாவட்ட பிரதிநிதிகளாக வெள்ளிமலை, ஈசன் இளங்கோ, சுந்தர் என்கிற அப்துல் காதர், கருணாநிதி, கந்தவேல், தமிழரசன், பெருமாள், கிருஷ்ணராஜ், முருகன், சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisment

வெற்றிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் மேயர் ராமச்சந்திரன், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe