Question about Seaman; Minister Shekharbabu  replied

Advertisment

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சிதான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என சீமான் பேசியுள்ளார். சூரியன் கிழக்கு திசையில் உதிக்கும். மேற்கு திசையில் சூரியன் உதிக்கும் போது வேண்டுமானால் அந்த மாதிரியான சூழ்நிலை வரலாம். சூரியன் தான் நிச்சயம் ஈரோட்டில் ஜெயிக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேனா விஷயத்தில் முதல்வர் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். அதற்கு எதிர்ப்புகள் நிறைய வருகிறது என கூறியுள்ளதாக சொல்கிறீர்கள். அவர் பேனா சின்னத்தை ஆதரித்து தான் பேசுகிறார். அந்த அறிக்கையை முழுவதுமாக படித்தால் பேனா சின்னத்தை வரவேற்று தான் பேசியுள்ளார். அந்த அறிக்கையினை முழுவதுமாக படித்து பேச வேண்டும். ஓரிரு வரிகளை மட்டும் வெட்டுவதும் ஒட்டுவதும் கூடாது” என்றார்.

Advertisment

இந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது, கலைஞரின்பேனா சின்னத்தை உடைப்பேன் என சீமான் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு “ஏற்கனவே அதற்கு நான் பதில் சொல்லிவிட்டேன் மீண்டும் ஒரு பதில் தேவை இல்லை” எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.