Advertisment

ஜெயக்குமார் குறித்த கேள்வி; “பதில் சொன்னால் சென்ஸார் கட் ஆகிவிடும்..” - அமைச்சர் நேரு கிண்டல் பதில்! 

Question about Jayakumar;

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில்களும்.

Advertisment

பால் பன்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை 14 கி.மீ நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது?

அமைச்சர் எ.வ. வேலு, “அதற்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவாகும். என்.எச்.ஏ.ஐ. தான் இதை செய்ய முடியும். திருச்சியில் 1.6 கிலோ மீட்டர்; அண்ணா சிலை முதல் மல்லாச்சிபுரம் வரை உயர்மட்ட சாலை, அதே போல் தலைமை தபால் நிலையம் முதல் எம்.ஜி.ஆர் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்ட மதிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்படும். பழைய சாலைகளை அப்புறப்படுத்தி தான் புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது. 6 அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகள் வாங்கி வைத்து வருகிறோம். உயரமான மரக்கன்றுகள் தான் சாலையில் வைக்கப்பட்டு வருகிறது.”

டெண்டர் பணிகள் முடிக்காமலே சில இடங்களில் மிரட்டி பணம் வாங்குவதாக தகவல்கள் வருகிறது?

“கண்டிப்பாக இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம். டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எனக்கு வந்துள்ளது. அதிமுக, திமுக என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.”

கிழக்கு கடற்கரை சாலையை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று மாற்றுவது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ஜெயக்குமார் சொல்கிறார்?

“நெடுஞ்சாலையை தனித் துறையாக்கியவர் கலைஞர். கல்லும், மண்ணுமாக கிடந்த சாலையை சரி செய்து, அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவர் கலைஞர். அதனால் அந்த சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயரிட்டுள்ளோம். இந்த பெயரால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மட்டும் தான் குழப்பம் வரும்” என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

இறுதியாக இது குறித்து கருத்து கூறிய அமைச்சர் கே.என் நேரு; “நான் இதற்கு பதில் சொல்வேன். ஆனால், சென்ஸாரில் கட் ஆகி விடும்” என்று அமைச்சர் நேரு பதில் அளித்தார்.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe