Advertisment

Puthukottai kandharvakottai constituency won by cpm

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் (தனி) திமுக கூட்டணியில் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரையும் அதிமுக கூட்டணியில் அதிமுக தீர்த்தான்விடுதி ஊ.ம தலைவர் ஜெயபாரதியும் போட்டியிட்டனர். பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் சிபிஎம் சின்னத்துரை 12,721 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் சிபிஎம் கட்சி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். கூட்டணி கட்சியினரின் முழு ஒத்துழைப்போடு இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றார் சின்னத்துரை. இதே தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் லெனின் 12840 வாக்குகளும், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ரெமிளா 12,661 வாக்குகளும், மநீம வேட்பாளர் ஆதிதிராவிடர் 848 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Advertisment