Pushing and shoving among Congressmen; Three had bleeding

Advertisment

தமிழக காங்கிரஸ்கமிட்டியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய ஜெயக்குமார், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளைக் காரணம் ஏதும் கூறாமல்பதவி நீக்கம் செய்து புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

திருநெல்வேலி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் அவராகவே நிர்வாகிகளை மாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயக்குமாரின் இத்தகைய முடிவு கட்சியின் வளர்ச்சிக்குத்தடையாக இருக்கும் என்று நினைத்த காங்கிரஸ்தொண்டர்கள் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் சத்தியமூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாததால் கட்சிக்காரர்கள் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனிடையே கட்சிக்காரர்களிடையே தள்ளுமுள்ளு உண்டாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குச்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கட்சிக்காரர்களின் செயலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.