தேர்தல் ஆணையத்தின் மீது புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; டெல்லி உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு!

Pugazhendi contempt of court case against Election Commission in Delhi High Court

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவில்லை என டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றினை கொடுத்திருந்தார். நேற்றைய தினம் தமிழகத்தில் அதிமுக சார்பில் 2 வேட்பாளர்களான இன்பதுரை, தனபால் ஆகியோர் டெல்லி நாடாளுமன்ற மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நீதிபதி சச்சின் தத்தா தேர்தல் ஆணையத்தில் புகழேந்தியால் கொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை விசாரித்து முடிவெடுத்த பின்னர் சின்னம் தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் எனவும் புகழேந்தியின் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

புகழேந்தியின் இந்த உத்தரவின் மீது தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிபதி மனோஜ் ஜெயின் முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தியால் தொடரப்பட்டது. அப்போது ஆஜரான தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்தார். அதை தொடர்ந்து அந்த நேரத்தில் அவமதிப்பு தற்பொழுது மட்டுமே அழுத்தம் தரப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் உத்தரவிடப்பட்டது. ஆனால் மீண்டும் தேர்தல் ஆணையம் விசாரிக்கவில்லை. ஆனால் அதே தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அந்த வழக்கில் புகழேந்தியை அழைத்து விசாரித்தது.

முதலில் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று வாதாடிய எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு எதிராக தற்காலிகமாக கொடுக்கப்பட்ட தடையணையை நீக்கி தேர்தல் ஆணையம் விசாரிக்க நீதிபதி சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற உத்தரவுகள் நிலுவையில் இருப்பதாலும் சிவில் நீதிமன்ற வழக்கு நிலுவை இருப்பதாலும் எடப்பாடி பழனிசாமி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி பொதுச்செயலாளர் என கையெழுத்திட அதிகாரம் இல்லை எனக் கூறி மீண்டும் புகழேந்தி மற்றும் சூரியமூர்த்தி ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரி, தமிழக தேர்தல் ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் தான் டெல்லியில் உள்ள வழக்கை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி தரப்பில் கோரப்பட்டது. ஆனால் அந்த வழக்கு நாடாளுமன்ற மேல் சபை தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் இன்று நீதிபதி கிரீஸ் கத் து பாளைய முன்னர் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவமதிப்பு வழக்கு என்பதால் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்புடன் காணப்பட்டது. தலைமை ஆணைய செயலாளரும் காணொளி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பை சார்ந்த வழக்கறிஞர் பாலாஜி, இன்பதுரை போன்றவர்கள் இருந்தனர். புகழேந்தி சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் திருமூர்த்தி மற்றும் மனோஜ் செல்வராஜ் ஆகியோர் மேல் சபை தேர்தலில் வேட்பாளர்களை கட்சியின் சார்பில் அறிவிக்க பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. எனவே தேர்தல் நேரத்தில் அவசரமாக இந்த மனுவை கொண்டு வந்தோம் என குறிப்பிட்டார்கள். நீதிபதி இது இது விடுமுறை நீதிமன்றம் என்பதால் விடுமுறைக்கு பின்னர் ஜூலை இரண்டாம் தேதி இதனை எடுத்துக்கொண்டு விசாரிப்பதாக கூறினார்.

admk admk symbol PUGALENTHI Rajya Sabha
இதையும் படியுங்கள்
Subscribe