/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2669.jpg)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக தொடங்கியுள்ளது. திமுக - அதிமுக கட்சிகளிடையே ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஓரளவு முடிவடைந்து வேட்பாளர் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காமல் புகைச்சலில் உள்ளனர்.
தமிழகத்தில் தே.மு.தி.க. தனித்து போட்டி என்ற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க வுடன் தே.மு.தி.க புதுக் கூட்டணி பேசி முடிவடைந்துள்ளது.
சில நாட்களாக அ.தி.மு.க. மா.செ. விஜயபாஸ்கருடன் தே.மு.தி.க. மா.செ.க்கள் மன்மதன், சுப்பிரமணியன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு 3 இடங்களும் அறந்தாங்கி நகராட்சி 3, ஆலங்குடி, அரிமளம், பொன்னமராவதி ஆகிய பேரூராட்சிகளில் தலா 3 இடங்களும் பெற்றுள்ளனர். கீரமங்கலம் உள்பட மற்ற சில பேரூராட்சிகளுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதிமுக - தேமுதிக புதுக்கூட்டணியால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)