புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் திமுக - அதிமுக வேட்பாளர் போட்டியிட்டனர். கடைசி நேரத்தில் 15வது வார்டு அதிமுக வேட்பாளர் நாராயணன் திமுகவில் இணைந்தார். அதே போல அதிமுக எம்எல்ஏ ரெத்தினசபாபதி மகன் ஏகாம்பர ஈஸ்வர் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். இப்படி விநோதங்கள் அங்கே நடந்தது.

Advertisment

pudukkottai manamelkudi

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான போது 14 வார்டுகளில் திமுகவும். ஒரு வார்டில் காங்கிரஸ் கட்சி என நூறு சதவீதம் வெற்றி பெற்று ஆளும் அதிமுகவுக்கு மரண அடி கொடுத்தனர்.

இன்று நடந்த சேர்மன் தேர்தலில் பரணி கார்த்திகேயன் போட்டியின்றி சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisment

இது குறித்து உ.பி.கள் கூறும்போது, அண்ணன் அதிமுக, அமமுக எந்த கட்சியில் இருந்தபோதும் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்வார். அதனால தான் பரணி தேர்தலில் கில்லாடி என்பது தெரியும் என்று ஸ்டாலின் கூறினார். இப்போது அதை நிறைவேற்றிக்காட்டிவிட்டார் என்றார்கள்.