/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TTV 452333_0.jpg)
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கடந்த மார்ச் 12- ஆம் தேதி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 15 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TTV 123333.jpg)
அதன்படி, திருபுவனை (தனி) சட்டமன்றத் தொகுதியில் சிலம்பரசன், மங்களம் சட்டமன்றத் தொகுதியில் கணபதி, வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியில் குமாரவேல், உழவர்கரை சட்டமன்றத் தொகுதியில் ராஜா (எ) ஏழுமலை, கதிர்காமம் சட்டமன்றத் தொகுதியில் செல்வ.கணேசன், இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதியில் மோகன், லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் காமாட்சி, முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் முருகன், ராஜ்பவன் சட்டமன்றத் தொகுதியில் சதீஷ்குமார், உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் சிராஜ் (எ) கனிமுகமது, முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மணிகண்டன், மணவெளி சட்டமன்றத் தொகுதியில் வீரபுத்திரன், ஏம்பலம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் பாலசங்கர், நிரவி திருபட்டினம் சட்டமன்றத் தொகுதியில் தண்டபாணி, ஏனம் சட்டமன்றத் தொகுதியில் பெடப்பட்டி ரமேஷ் பாபு ஆகியோர் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.
அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், காரைக்கால் (வடக்கு), மாஹே ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)