Skip to main content

முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

 

pudhucherry former cm buried with respect to the state

 

முதலமைச்சர்  நாராயணசாமி,  அமைச்சர்கள் நமச்சிவாயம்,  கந்தசாமி,  கமலக்கண்ணன் திமுக மாநில அமைப்பாளர்கள் சிவகுமார்,  சிவா மற்றும் தோழமை கட்சியினர், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஜானகிராமன் உடல் அவரது சொந்த ஊரான மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி போலீசார் புதுச்சேரி அரசின் சார்பில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின்,  முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  பொன்முடி மற்றும் எம்எல்ஏக்கள்,  திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 "மக்கள் அலட்சியப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" - முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்! 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

"People should be vaccinated without neglect" - Chief Minister Rangasamy's request!

 

புதுச்சேரி சுகாதாரத்துறையில் 136 தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி வழங்கியதையடுத்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், சமுதாய நல மையங்கள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிவதற்காக 136 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.  இதனிடையே, "மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்"  என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக ரங்கசாமி வெளியிட்டுள்ள வீடியோ செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: "கரானா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தாங்களாகவே தங்களைப் பாதுகாத்துக் கொண்டால் ஒழிய மரணத்திலிருந்து தப்பிப்பது மிகவும் சிரமமாகும் என  மருத்துவர்கள் கூறுகின்றனர்.  


நிச்சயமாக ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதில் எந்தவித அச்சமும் இல்லை என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கட்டாயமாக ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்  கரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். தேவையான தடுப்பு ஊசிகள் சுகாதாரத்துறை இடம் இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் அலட்சியப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார். 

 

Next Story

நியமன எம்.எல்.ஏ. விவகாரம்..! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

Nominated MLA  Adjournment of judgment without specifying a date.

 

புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும்,  பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த 07ஆம் தேதி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று, அதன் பிறகு ஊருக்குத் திரும்பிய நிலையில், தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அமைச்சரவை பதவி ஏற்கவும் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.

 

இதனிடையே பாஜகவைச் சேர்ந்த கே. வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், ஆர்.பி. அசோக்பாபு ஆகிய 3 பேரை மத்திய அரசு நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டது. அமைச்சரவை, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பொறுப்பேற்காத நிலையில் மத்திய அரசு வெளியிட்ட இந்த உத்தரவால் புதுச்சேரியில் குழப்பம் நிலவிவருகிறது. 

 

இந்த நிலையில், இந்த நியமன உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்தும், நியமன எம்.எல்.ஏக்கள் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், கிராமப்புற மக்கள் வாழ்வாதார இயக்கத்தின் தலைவருமான கோ.அ. ஜெகந்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (20.05.2021) விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனனும், "அரசு பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளது. எனவே மூன்று பேர் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை" என வாதிட்டனர். மேலும், நியமன எம்.எல்.ஏக்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள்,  "அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்கக்கூடாது" என வாதிட்டனர்.

 

அதற்கு மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஞானசேகரன்,  "சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்காத நிலையில், நியமன உறுப்பினர்கள் நியமித்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என வாதிட்டார்.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.