/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_771.jpg)
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இன்று (4.3.21) மாலை 7 மணியுடன் பரப்புரை எல்லாம் முடிவுக்கு வருகிறது. இதற்காக இறுதி கட்ட வாக்குச் சேகரிப்பில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் கடந்த ஐந்து ஆண்டுகளாக காணவில்லை என்று கூறி போஸ்டர் அடித்து பொதுமக்கள் ஒட்டி உள்ளனர். கடந்த வாரம் முழுவதும் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் பிரச்சாரத்திற்காக சென்ற பல இடங்களில் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டார்.
இவ்வாறு அமைச்சர் மீது தங்களது அதிருப்தியை காட்டிவந்த மக்கள் தற்போது அமைச்சரை காணவில்லை என போஸ்டர் ஒட்டியுள்ளனர். திருச்சி இருதயபுரம், பாலக்கரை, குட்செட் ரோடு, முதலியார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த காணவில்லை போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow Us