Advertisment

லண்டனில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை வெளிநாடு புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் சென்றார். எடப்பாடி பழனிசாமியையும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் வரவேற்க சிலர் காத்திருந்தனர்.

Advertisment

Protest against Edappadi Palanisamy in London

அப்போது லண்டன் விமான நிலையத்தில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜயபாஸ்கருக்கு எதிராக அமைதி வழி கருத்து பரப்புரை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டது ஆகியவற்றை கண்டித்து, தமிழக அரசுக்கு எதிராக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அமைதி வழி கருத்து பரப்புரை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisment

இவர்கள் இந்தப் பரப்புரையில் ஈடுபட்டதால், கடைசி வரையில், பயணிகள் வெளியேறும் வழியில் முதல்வர் வரவில்லை. முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் வேறு மாற்று வழியில் சென்றதாக கூறப்படுகிறது.

protest against Edappadi Palanisamy london

london Edappadi Palanisamy against protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe