Advertisment

வெளியான உத்தேச பட்டியல்... குமரி வரும் அமித்ஷா...

Proposed list released ... Amit Shah coming to Kumari ..

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு,தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில்தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

Advertisment

இத்தகைய அரசியல் சூழ்நிலையில் இன்று கன்னியாகுமரி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வரும் அமைச்சர் அமித்ஷா, சுசீந்திரம் கோயிலுக்குசென்று வழிபாடு நடத்திய பிறகு 'வெற்றி கொடி ஏந்தி வெல்வோம்' என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இருக்கிறார். அதன்பின் சட்டமன்றத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசிக்கஇருக்கிறார். பாஜக சார்பில் போட்டியிடுவோருக்கான உத்தேச பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில்பாஜக சார்பில் முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப் பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

பஜகபோட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்குறித்த உத்தேச பட்டியல்படி ராசிபுரம் - எல்.முருகன், கிணத்துக்கடவு - அண்ணாமலை, கோவை தெற்கு - வானதி ஸ்ரீனிவாசன், சேப்பாக்கம் - குஷ்பு, நெல்லை - நாகேந்திரன், ராஜபாளையம் - கவுதமி, மயிலாப்பூர் - கே.டி.ராகவன், காரைக்குடி - ஹெச்.ராஜா, காஞ்சிபுரம் - கேசவன், திருத்தணி - சக்கரவர்த்தி, பழனி - கார்வேந்தன், சிதம்பரம் - ஏழுமலை, ஆத்தூர் - பிரேம்துரைசாமி, திருவண்ணாமலை - தணிகைவேல், வேலூர் - கார்த்தியாயினி, தூத்துக்குடி - சிவ முருக ஆதித்தன், துறைமுகம் - வினோஜ் பி.செல்வம் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான இந்தப் பட்டியல் அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லை என்றும், இதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Pon Radhakrishnan Kanyakumari amithshah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe