தமிழ்நாடு அரசு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொத்துவரியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 5ஆம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று பாஜக ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. அதன்படி பா.ஜ.க.வின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சொத்து வரி உயர்வு! பாஜக ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment