ADVERTISEMENT

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்!

03:18 PM Mar 26, 2024 | ArunPrakash

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு விவரங்களைத் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ:

திருச்சி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்களில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவுக்கு ரூ. 35.90 கோடிக்கு சொத்து உள்ளதாக அவரது வேட்பு மனுவுடன் இணைத்துள்ள ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ரூ. 2,05,000, அவரது மனைவி கீதா ரூ. 5,02,000, மகன் வருண் ரூ. 2,500, மகள் வானதி ரேணு ரூ. 2,000. மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் அசையும் சொத்தாக ரூ. 2,18,94,789, அசையா சொத்துக்கள் ரூ. 33,71,89,498 என மொத்தம் ரூ.35,90,84,287(35.90 கோடி)உள்ளது. மேலும் ஒரு கார் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு கடன் ரூ.1,35,65,000 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். (2.07 கிலோ தங்க நகைகள், 6.38 வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் உள்பட ரூ.1.35 கோடி கடன்). துரை வைகோ மீது எந்த வழக்கும் இல்லை.

அ.தி.மு.க. வேட்பாளர் ப. கருப்பையா:

அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா, அவரது மனைவி விமலா, மகன் குருநாத் பன்னீர்செல்வம், மகள் மகிபாலாநானி ஆகியோரது பெயர்களில் அசையும் சொத்துகள் ரூ. 2,52,08,542 மற்றும் அசையா சொத்தாக ரூ. 30,75,000 என மொத்தம் ரூ. 2,82,83,542 ( 2.82 கோடி) உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரிடம் 3 கார்கள், 5 டிப்பர் லாரிகள் உள்ளன. 506 கிராம் தங்க நகைகள் உள்ளன. ரூ.3.07 கோடி கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கருப்பையா பெயரில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

அ.ம.மு.க. வேட்பாளர் ப. செந்தில்நாதன்:

அ.ம.மு.க. வேட்பாளர் ப. செந்தில்நாதன், அவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் பவித்ரா, யாழினி ஆகியோர் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.88,31,187 அசையா சொத்துகள் ரூ.7.30 கோடி என மொத்தம் ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களிடம் 1.100 கிலோ தங்கம் உள்ளது. ரூ.64.08 லட்சம் கடன் உள்ளது. 2 கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது திருச்சி கோட்டை, தில்லை நகர் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT