"அவரே மூன்றாவது முறை தமிழகம் வர திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்; இப்ப போய் பாதுகாப்பு சரியில்லையாம்" - டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

 'The Prime Minister is planning to come to Tamil Nadu for the third time; does it mean that the security is not good now?'- DKS Elangovan interview

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அண்மையில் திமுகவின் பொதுக்குழு நடந்திருந்த நிலையில் பொதுக்குழுவை அடுத்து முதன்முறையாக கூட்டப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்ற நிலையில் இது முக்கியத்துவம் பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசித்ததாகத்தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''ஏற்கனவே நாடாளுமன்றத்தேர்தல் சம்பந்தமான மாவட்டகழகச் செயலாளர்கள் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் முறையில் முடிந்து. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இது பேராசிரியர் நூற்றாண்டு விழா குறித்த கூட்டமாக இருந்தது. கொள்கைகளைக் கொண்டுபோய் சேர்ப்பது, மாணவர்களை;இளைஞர்களை ஊக்கப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேராசிரியர் எந்த லட்சியத்தோடு பாடுபட்டாரோ, அந்த லட்சியம் இன்றைக்கும் தேவைப்படுகிற லட்சியமாக இருக்கின்ற நிலையில், எதிரிகள் மாற்றுக் கருத்துக்களைச் சொல்லி வருகின்றனர். அதனால் லட்சியங்களை, கொள்கைகளை இன்னும் தீவிரப்படுத்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் இங்கு வந்து பார்த்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி போய் விட்டு அதன் பிறகு பிறகும் தமிழகம் வந்துவிட்டு மீண்டும் ஒருமுறை தமிழகம் வருவதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்ப போய் அன்னைக்கு பாதுகாப்பு சரியில்லை என்று சொன்னால் அவர் ஒரு போலீஸ் ஆபீஸரா? பிரதமர் பாதுகாப்பு என்றால் டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் இங்கே வந்து பாதுகாப்பு பணிகளை எல்லாம் மேற்பார்வையிட்டு குறை இருந்தால் சொல்லி சரி செய்து விடுவார்கள். பிரதமர் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வந்து விடுவார்கள். எல்லாம் முடிந்தபிறகு பிரதமருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு சரியில்லை என்று சொன்னால் டெல்லியில் உள்ள பிரதமருடைய பாதுகாப்பு படையினர் ஏதாவது தப்பு செய்துவிட்டார்கள் என்று சொல்கிறாரா? நான் நேற்று வேடிக்கையாக சொன்னது போன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மேல ஏதாவது வருத்தம் இருக்கிறதா? என்று எனக்கு புரியவில்லை'' என்றார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Subscribe