பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் உடனிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ராமதாஸ், பிரகலாத் மோடி ஆகியோர் விவாதித்தனர். தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சமூக நீதிக்காக ராதமதாஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தச் சந்திப்பின் போது, பிரகலாத் மோடி நினைவு கூர்ந்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ ( Beti Bachao Beti Padhao) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் ஒன்றை ராமதாசிடம் பிரகலாத் மோடி வழங்கினார். ராமதாஸ் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பிரகலாத் மோடி அவர்கள் தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});