amma scooter  scheme

Advertisment

இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள். இதையொட்டி, அவர் அறிவித்த திட்டமான பெண்களுக்கு மானிய விலையில்இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். ஆரம்பத்திலிருந்தே அவசர, அவசரமாகதான் விழா நடந்தது. இதன் கடைசி நிகழ்வாக பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் உரையாற்றி முடித்தவுடன் கிளம்ப முற்பட்டார். தேசியகீதம் குறித்து துணை சபாநாயகர் தம்பிதுரை நினைவுபடுத்தியபோதும் அதை புறக்கணித்து கிளம்பிவிட்டார். இதனால் தேசியகீதம் இசைக்கப்படாமலேயே விழாநிறைவுபெற்றது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வர் வைத்தகோரிக்கைக்கு பிரதமர் தனது உரையில் பதிலளிக்கவில்லை.