ADVERTISEMENT

பிரதமருக்கு நெஞ்சுரம் இல்லை, அவர் ஒரு கோழை! - வைகோ

08:51 PM Apr 11, 2018 | Anonymous (not verified)


கருப்பு கொடியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் பிரதமருக்கு இல்லை. அவர் ஒரு கோழை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழும்பூர் தாயகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது...

"தமிழகத்தை நாசகரமாக்கும் நியூட்ரினோ திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என மோடி நிர்பந்தித்து வருகிறார், பல நடைமுறைகளை மத்திய அரசு வேண்டும் என்றே மாற்றியமைத்து எப்படியாவது நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஒரு வேளை இந்த திட்டம் நிறைவேற்ற படுமானால் தமிழகம் மற்றும் கேரளா இரண்டும் பாலைவனமாகும். தமிழகம் இதற்கு எக்காலத்திலும் அனுமதி வழங்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமையாது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு நீதியை குழி தோண்டி புதைத்து விட்டார்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என ஒவ்வொரு திட்டமாக கொண்டு வந்து, தமிழகத்தை பஞ்ச பிரதேசமாக மாற்றிவிட்டு, அதானிக்கும், அம்பானிக்கும் தமிழகத்தை கூறுபோட்டு விற்று விட்டு, இங்குள்ள இறையாண்மையை சிதைத்து ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை இங்கு நிலை நாட்டுவதே பா.ஜ.க அரசின் நோக்கம்.

தமிழக அரசு சார்பில் வாதாடும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சேகர் நாப்தே, மேலாண்மை வாரியம் பற்றி பேசும்போது அதை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என எச்சரிக்கும் அவர், மத்திய அரசு மீது பொய் கோவம் காட்டி விட்டு, அவர்கள் உத்தரவை செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தின் வாழ்வுரிமையை புதைத்துவிட்டு, அனைத்து கட்சி கூட்டம் போட்டு பிரதமரை பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டதற்கு மறுத்துவிட்டு தற்போது ராணுவ கண்காட்சி என்ற பெயரில் பிரதமர் தமிழகம் வருவது நியாயமற்றது.

நரேந்திர மோடி ஒரு கோழை, வான் வழியை தவிர்த்து விட்டு சாலையில் பயணித்து கருப்பு கொடியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் பிரதமருக்கு இல்லை. பிரதமர் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் போகும் வழியில் உள்ள சின்னமலை பகுதியில் என் தலைமையில் கருப்புக்கொடி காட்டப்படும்.

நேற்று ஐ.பி.எல்லுக்கு எதிரான போட்டியில் காவல்துறை தடியடி கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர் போட்டியில் இரண்டு உச்ச நடிகர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் முதல்வர் கனவில் மிதப்பதாகவும், அந்த கனவு எனக்கு எப்போதும் இருந்ததில்லை."

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT