Advertisment

'குக்கர்' கிடைத்ததற்குப் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அமமுகவினர்!

TTV Dhinakaran

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 'பிரஷர் குக்கர்' சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'கரும்பு விவசாயி' சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும், 'டார்ச் லைட்' சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

Advertisment

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.ம.மு.க சார்பில், போட்டியிட்ட டி.டி.விதினகரனுக்கு சுயேட்சை சின்னம் ‘குக்கர்’ ஒதுக்கப்பட்டது. குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட உடனே, தனது வெற்றி தீர்மானிக்கப்பட்டது என்று சொன்னார். இந்தத் தேர்தலில், தினகரன் 40 ஆயிரத்து 707 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அதனுடன் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க.வுக்கு 'குக்கர்' சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து அ.ம.மு.க.வுக்கு மீண்டும் 'குக்கர்' சின்னம் ஒதுக்க வேண்டும் என்று டி.டி.விதினகரன் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில், வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு அ.ம.மு.ககட்சிக்கு, 'குக்கர்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் கட்சிக்கு கிடைத்த தகவலை அறிந்ததும் அ.ம.மு.கதொண்டர்கள் தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.

அ.ம.மு.கபொதுச் செயலாளர் டி.டி.விதினகரன், தனது ட்விட்டர் பக்கத்தில், ''இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசிகளைப் பரிபூரணமாகப் பெற்றிருக்கும், நம்முடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிச் சின்னமான குக்கர் சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறதுஎன்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

ammk cooker TTV Dhinakaran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe