Advertisment

சீன அதிபரை வரவேற்க காத்திருக்கும் வாத்தியங்கள்..!(படங்கள்)

Advertisment

சீன அதிபர்மற்றும் மோடி சந்திப்பு இன்று மாமல்லபுரத்தில் நிகழவிருக்கிறது. அதற்காக மோடி சென்னை வந்தடைந்தார். அவர் தற்போது கோவளம் பகுதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். சென்னை விமான நிலையம் வரும் சீன பிரதமர் ஜீ ஜின்பிங் கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கவிருப்பதால் விமான நிலையம் முதல் சோழா ஹோட்டல் வரையில் அவரை வரவேற்க செண்டை மேளம், நாதஸ்வர இசை, கரகாட்டம் முதலிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழிநெடுகிலும் மோடி மற்றும் ஜின்பிங் படங்களையும் இந்திய - சீன கொடிகளை பிடித்தவாறு பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் காத்திருக்கின்றனர். கிண்டியிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், உள்ளிட்ட கலைஞர்கள் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.

india and china leaders china modi mahabalipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe