Advertisment

“விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்...” பிரேமலதா பேட்டி

Premalatha vijayakanth press meet

Advertisment

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளை இன்று குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள் மற்றும் கட்சியினருக்கு பிரேமலதா விஜயகாந்த் இனிப்புகளை வழங்கினார். ரசிகர்களும், கட்சியினரும் ‘கேப்டன் வாழ்க’ என முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது அவர், “சட்டசபை தேர்தலில் தேமுதிக கூட்டணியா, தனித்து போட்டியா என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். இப்போதைக்கு அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது. தேர்தலின்போது முடிவு எடுக்கப்படும். தேர்தல் நெருங்கும்போது செயற்குழு, பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும். தேமுதிகவிற்கு கிடைக்க வேண்டியது உரிய நேரத்தில் கிடைக்கும்.

விஜயகாந்த் இனி கிங் ஆக இருக்கவேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் எண்ணம். தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. டிசம்பர், ஜனவரியில் பொதுக்குழு, செயற்குழு கூட்டி முடிவெடுக்கப்படும்”. என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

BIRTHDAY CELEBRATION dmdk premalatha vijayakanth vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe