Premalatha Vijayakanth criticized about dmk government

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மருத்துவர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. எந்தவிதத்திலும் மக்களை பாதுகாக்கவில்லை என்றால், நிச்சயமாக மக்களின் எதிர்ப்பை இந்த ஆட்சி சந்திக்க நேரிடும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. இன்றைக்கு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை, மீனவர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மக்கள் நலப்பணியாளர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம் என இப்படி ஒவ்வொரு நாளும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

Advertisment

75 ஆண்டு கால ஆட்சியில் இருக்கிறோம் என்று பெருமை பேசும் திமுக, ஆட்சிக்கு வரும்போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. டிசம்பர் மாதத்தில் வரக்கூடிய வெள்ளத்திற்கு, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேரளாவை போல் நீதியரசர்கள், இந்த அரசு செய்யும் அத்தனையையும் சுட்டிகாட்டி தீர்வை கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.