பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி..! - அமமுக முடிவு..!

ddd

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த தேமுதிக, 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை அதிமுக நடத்தவில்லை என்று கூறியது. இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அதிமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்கள். கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக தலைமை ஏற்கவில்லை.

இதையடுத்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டார். இதனை தேமுதிக தொண்டர்கள் வெடி வெடித்துக் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அமமுகவுடன் பேச்சுவாத்தை நடத்தியது. இதில் தேமுதிகவுக்கு 70 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றனர். அமமுகவோ 60 தொகுதிகளை ஒதுக்கியதுடன், தேமுதிகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். விஜயகாந்த் கட்சி தொடங்கி முதன்முதலாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடவில்லை.

முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி. தினகரனை ஏற்கவும் தேமுதிக சம்மதித்துள்ளது. துணை முதலமைச்சராக பிரேமலதா விஜயகாந்த்தை ஏற்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை அமமுக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ammk dmdk premalatha vijayakanth TTV Dhinakaran
இதையும் படியுங்கள்
Subscribe