Advertisment

பிரச்சாரத்தில் மாற்றி மாற்றிப் பேசும் பிரேமலதா கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சி !

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வேட்பாளரான அன்புமணிக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அன்புமணி அவர்கள் தமிழ்நாடு முன்னேற பல நல்லத் திட்டங்களை பற்றி பேசக்கூடியவர் . மத்திய அமைச்சராக இருந்த போது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர் .அதோடுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் பூர்ண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று தற்போது வரைப் போராடிக்கொண்டு இருப்பவர் இந்த மாதிரியான திட்டங்கள் மற்றும் செயல்களை செய்வதற்கு இவரைப் போன்ற இளைஞர்கள் தேவை என்றும் கூறினார் .

Advertisment

premalatha

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பிரச்சாரத்தின் போது மொரப்பூர் - தருமபுரி இணைப்பு ரயில் பாதை திட்டத்தை கொண்டு வந்தவர் என்று சொல்வதற்கு பதிலாக பெரம்பூர் - தருமபுரி திட்டம் என்று மாற்றிக் கூறினார் . சமீப காலமாக பிரேமலதா விஜயகாந்த் இப்படி மாற்றிப் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் . முன்னதாக ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் என்று சொல்வதற்கு பதிலாக அதிமுக வேட்பாளர் என்று சொல்லி பின்பு பாஜக வேட்பாளர் என்று சமாளித்தார் . இப்போது தருமபுரி பிரச்சாரத்தில் திட்டத்தின் ஊர் பெயரையும் மாற்றி சொன்னது இல்லாமல் அன்புமணியை கிண்டல் செய்வது போல் இளைஞர் அன்புமணி என்று சொன்னதும் கிண்டலாகப் பார்க்கப்படுகிறது .

anbumani ramadoss pmk premalatha vijayakanth dmdk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe