Advertisment

பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா... உத்தரவு போட்ட ஸ்டாலின்... களத்தில் இறங்கிய திமுகவினர்!

வரும் சட்டமன்றத்தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க. சந்திக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தி.மு.கவிற்கு ஆலோசனைகளைக் கூற நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் டீம் பல்வேறு அதிரடி மாற்றங்களை திமுகவில் கொண்டு வர திட்டம் போட்டு வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாக சொல்கின்றனர். அதோடு திமுகவில் இருக்கும் இளைஞர்களை ஒன்றிணைக்க சமூக வலைத்தளங்கள் மூலம் முயற்சி எடுக்கலாம் என்று பிரசாந்த் கிஷோர் டீம் புது ஆலோசனையை திமுக தலைமையிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

Advertisment

dmk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில், திமுக தனது கட்சி தொடர்பான தகவல்களையும், செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக திமுகவின் இளைஞரணியினர் சமூக வலைத்தளங்களில் அதிக முயற்சி எடுக்க வேண்டும் என்று திமுக தலைமை கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் சமீபத்தில் திமுகவில் இணைந்துள்ள இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ட்விட்டரில் 'ஒன்றிணையுங்கள் திமுக நட்புகளே' என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் திமுகவில் இருப்பவர்கள் எளிதாக தொடர்புகொண்டு திமுகவின் பலத்தை சமூக வலைத்தளத்தில் அதிகரிக்க முடியும் என்று கூறிவருகின்றனர். மேலும் வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் திமுக தலைமை நினைப்பதாக சொல்லப்படுகிறது.

New plan politics stalin udhayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe