அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் தேமுதிக விசாரணை குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி, சென்னை வடக்கு தொகுதியில் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், திருச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் வி.இளங்கோவன், கள்ளக்குறிச்சியில் தேமுதிக துணை செயலாளரும், உயர்மட்ட குழு உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்று கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் எல்.கே.சுதீஷ்க்கு ஆதரவாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். இதையடுத்து தேமுதிக தலைமையில் இருந்து அறிக்கை வெளியாகி உள்ளது. வரும் 27ஆம் தேதி புதன்கிழமை மாலை 4 மணியளவில் திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்து தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.