குமரி மாவட்டம் தக்கலையில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் தேர்தல் நிதி அளித்தல் மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:

Advertisment

2014ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ அரசு மோடி தலைமையில் அமைந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று கூறியவர்கள், ஐந்து ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது.

Advertisment

prakash karat

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நியாய விலை கிடைக்கும் என்று கூறியவர்கள், எதுவும் வழங்காமல் உள்ளனர். விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்றவர்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக்கொண்டு இருக்கின்றனர்.

சர்வாதிகாரத்தை பயன்படுத்தி நீதித்துறை, ரிசர்வ் வங்கி, சிபிஐ ஆகியவற்றை சீரழித்துள்ளனர். இந்த அரசு மீண்டும் வந்தால், நாடாளுமன்ற ஜனநாயகம், மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிடும். நமது ஒரே குறிக்கோள் வரும் தேர்தலில் பாஜ அரசை அகற்ற வேண்டும். மதசார்பற்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

Advertisment

தமிழகத்தில் பா.ஜ., அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. நமது இலக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி கூட பா.ஜ. அணியில் இருந்து வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசியலில் மக்களை பிளவுபடுத்த முயலக்கூடிய ஆர்எஸ்எஸ், பா.ஜ.வை முறியடித்திட வேண்டும். இவ்வாறு பேசினார்.