Advertisment

தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்! 

தினகரனுக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான அதிகார மோதலில் ஆடிட்டர் இருக்கார்னு ஒரு தகவல் வெளியானது. தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர் குருமூர்த்தி தான்கிற முடிவுக்கு வந்த எடப்பாடி, இப்ப அவருக்கு எதிரான புகார்களை எல்லாம் தூசு தட்டச் சொல்லியிருக்கார். குருமூர்த்தி மீது ஏற்கனவே புகார் சொன்ன மறைந்த நடிகர் சோ மனைவி, நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் பா.ஜக. பிரமுகரான ஆசிர்வாதம் ஆச்சாரி உள்ளிட்டோரிடமும், பெரியாரிஸ்டுகள், பத்திரிகையாளர்கள் சிலரிடமும் அவருக்கு எதிரான புகார்களை சேகரிக்கிறார்களாம்.

Advertisment

ops

இதனால ஆடிட்டர், கொஞ்சம் அடக்கிவாசிக்கத் தொடங்கியிருக்கார். சங்கரமடத்தில் ஆடிட்டர் மூக்கு நுழைக்கக் கூடாதுன்னு சுப்பிரமணியசாமி பிரஷர் கொடுத்து வருவதால், அந்த ஏரியாவிலும் நடமாட்டத்தைக் குறைத்து விட்டாராம் ஆடிட்டர். அதனால விஜயேந்திரரும், அவர் தம்பி ரகுவும், மடத்தின் மேனேஜர் சுந்தரேசனும் நிம்மதிப் பெருமூச்சு விடறாங்களாம். புதிய நெருக்கடிகளால் ஆடிட்டர் தரப்பு டெல்லியின் உதவியை எதிர்பார்க்குறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment
gurumurthy ammk admk ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe