மதுரையில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகிவரும் நேரத்தில், 'அகரத்தின் முதல்வரே' என குறிப்பிட்டு மதுரையில் நகரமெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Posters in support of Surya

சினிமா, அரசியல் எதுவானாலும் மதுரைதான் பிளையார் சுழி போடும். பெரும் பெரும் தலைவர்களுக்கு மதுரைதான் முதலில் ஆதரவு கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் பொறி இங்கிருந்துதான் கிளம்பும். அப்படிதான் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்களை நகரெங்கும் ஒட்டியுள்ளனர். சூர்யாவின் அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டது மதுரை என்கிறனர் போஸ்டர்களை பார்ப்பவர்கள்.